உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 11.25 லட்சம் பனை விதைகள் நடவு குறித்து ஆலோசனை கூட்டம்

11.25 லட்சம் பனை விதைகள் நடவு குறித்து ஆலோசனை கூட்டம்

ஈரோடு, பனை விதைகள் நடவு இயக்கம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.இதில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 11.25 லட்சம் பனை விதை, பனங்கன்று நடவு செய்ய வேண்டும். எங்கெங்கு எந்த துறைகளின் கீழ் பனை நடவு செய்ய நிலங்கள் உள்ளன என்பதை தெரிவிக்கலாம். மறுபுறம் அனைத்து துறை சார்ந்தவர்கள், தன்னார்வலர் அமைப்புகளுடன் இணைந்து தேவையான விதைகளை சேகரித்து, தேவையானவர்களுக்கு வழங்க வேண்டும். பொது அமைப்பினர்: விதைகளை சேகரித்து எடுத்து வர, உள்ளாட்சி அமைப்பினர், அவர்களது வாகனங்களை வழங்கி உதவ வேண்டும். சாலை ஓரம், பொது இடம், நீர் நிலை அருகே நடும் விதை அல்லது கன்றை பராமரிக்கவும், தண்ணீர் ஊற்றவும் வழி செய்து தர வேண்டும். பனை மரம், அதன் அவசியம் குறித்து மக்கள், பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டி.ஆர்.ஓ., சாந்தகுமார்: பனை விதை, பனங்கன்றுகளை நடவு செய்யும்போது கரடு போன்ற இடங்களை தவிர்த்து, வளரும் இடத்தை அறிந்து நட வேண்டும். கால்நடைகள் அவற்றை உண்ணாது. இருப்பினும், தண்ணீர் ஊற்றி, யாரும் பறித்துப்போட்டு விடாமல் பராமரிக்க வேண்டும். பஞ்., - யூனியன் அதிகாரிகள், என்.ஜி.ஓ.,க்களுடன் இணைந்து விரைவுபடுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் ஈரோடு மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, திட்ட இயக்குனர் பிரியா, ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா, வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை