உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்

ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்

மல்லசமுத்திரம், நவ. 30-மல்லசமுத்திரம் டி.சி.எம்.எஸ்.,சில் வெள்ளிக்கிழமை தோறும், கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது.அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், சூரியகவுண்டம்பாளையம், ராமாபுரம், கொசவம்பாளையம், மேல்முகம், காளிப்பட்டி, பள்ளக்குழி அக்ரஹாரம், மாமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடையுள்ள, 35 மூட்டை கொப்பரை தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில், முதல் தரம் கிலோ, 101.30 ரூபாய் முதல், 134.80 ரூபாய்; இரண்டாம் தரம், 92.10 ரூபாய் முதல், 102.30 ரூபாய் என, மொத்தம், 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரம், ஒரு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமான நிலையில், நேற்று, விற்பனை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்த ஏலம் வரும், 6ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை