உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேடப்படும் குற்றவாளியாக இருவரை நீதிமன்றம் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளியாக இருவரை நீதிமன்றம் அறிவிப்பு

குமாரபாளையம்: பல்வேறு குற்றவழக்குகளில் தலைமறைவாக உள்ள இருவரை தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது-குறித்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: குமாரபாளையம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்-தப்பட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் நீதி-மன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர். இதனால் இந்த வழக்கு நடந்து வரும், திருச்செங்கோடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், அரசு மேல்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்த கோவிந்தராஜ், சேலம் அம்மாபேட்டை, ராஜகணபதி வீதியை சேர்ந்த சிவா ஆகிய இருவரையும் தேடப்படும் குற்றவா-ளிகளாக அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை