உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சத்துணவு திட்டப்பிரிவில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணி: விண்ணப்பம் வரவேற்பு

சத்துணவு திட்டப்பிரிவில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணி: விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல், 'நாமக்கல் ஒன்றியத்தில், சத்துணவு திட்டப்பிரிவில் தற்காலிக கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் ஒன்றியத்தில், சத்துணவு திட்டப்பிரிவில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. மாத சம்பளம், 14,000 ரூபாய் வீதம், தொகுப்பூதிய அடிப்படையில், தற்காலிகமாக, ஓராண்டிற்கு நியமிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் எம்.எஸ்., ஆபீஸ் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், தமிழ் லோயர் டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல், 40 வயதிற்குள் இருக்கு வேண்டும்.பணிக்கான விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றுகள் மற்றும் அனுபவ சான்றுடன், வரும், 17, மாலை, 5:00 மணிக்குள், நாமக்கல், வகுரம்பட்டியில் உள்ள தமிழக மாநில வாழ்வாதார இயக்க அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை