உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை, மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட சேலம் சாலை, திருச்சி சாலை, துறையூர் சாலை, பரமத்தி சாலை, சேந்தமங்கலம் சாலை, மோகனுார் சாலை, திருச்செங்கோடு சாலை, ஆஞ்சநேயர் கோவில் பகுதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள், குடியிருப்புகள் ஆகிய பகுதிகளில் வாக-னங்கள் மூலம் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவ-குமார், மாநகர் நல அலுவலர் கஸ்துாரிபாய், சுகாதார அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கரன், ஜான் ராஜா, சுப்பிரமணியன், களப்பணி உதவியாளர் சபரிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ