உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லிங்கம் மீது சூரிய ஒளி பக்தர்கள் தரிசனம்

லிங்கம் மீது சூரிய ஒளி பக்தர்கள் தரிசனம்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த மேட்டுப்பட்டி சிவன் கோவிலில் உள்ள லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வை, ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.நாமக்கல் மாவட்டம், எம்.மேட்டுப்பட்டியில், சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோ-விலில் ஆண்டுதோறும், மாசி, புரட்டாசி மாதங்களில் சூரிய ஒளி, நேரடியாக கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தி மீதும், கருவ-றையில் உள்ள லிங்கம் மீதும் விழும் அதிசய நிகழ்வு நடக்கிறது. அதன்படி, கடந்த மாசி, 27, 28, 29 ஆகிய தேதிகளில் இந்த அதி-சய நிகழ்வு நடந்தது.இதையடுத்து, புரட்டாசி மாதமான, நேற்று முன்தினம் காலை, 6:20 முதல், 6:35 வரை, 15 நிமிடம் சூரிய ஒளி, சிவலிங்கம் மீது விழுந்தது. அதேபோல், நேற்றும் காலை, 6:20 முதல், 6:35 வரை, 15 நிமிடம், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசமடைந்து, சுவா-மியை வழிபட்டனர். தொடர்ந்த, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை