உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முத்தாயம்மாள் கல்லூரியில் இன்ஜி., கூட்டமைப்பு துவக்கம்

முத்தாயம்மாள் கல்லூரியில் இன்ஜி., கூட்டமைப்பு துவக்கம்

ராசிபுரம்: ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி மின்னணு மற்றும் கருவியியல் துறை சார்பில், 2011-2012ம் கல்வி ஆண்டிற்கான இன்ஜினியர் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் முருகானந்தம் வரவேற்றார். கல்லூரி தாளாளர் கந்தசாமி, செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ செயலாளர் பிரியங்கா, திட்ட அறிக்கையை வெளியிட்டார். பேராசிரியர் சிவானந்தராஜா பங்கேற்று, கருவியியல் துறையின் முக்கியத்துவம் குறித்தும், வேலைவாய்ப்புகள் பற்றியும் விளக்கி பேசினார். விழாவில், தொழில்நுட்ப இதழ் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், விரிவுரையாளர் ராதிகா, துணை மாணவச் செயலாளர் யுவராஜ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி