உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி துவக்கம்

கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி துவக்கம்

நாமக்கல், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண் டிப்ளமோ பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. நாமக்கல் - சேலம் சாலையில், மாவட்ட கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், 2025-26ம் ஆண்டுக்கான டிப்ளமோ பயிற்சிக்கான சேர்க்கை நடந்தது. இதையொட்டி பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடந்தது. மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி வகுப்புகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு, பயிற்சி கையேடுகளை வழங்கி கூட்டுறவு பயிற்சி குறித்து விளக்கினார்.பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி, துணைப்பதிவாளர் இந்திரா, துணை முதல்வர் காயத்ரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் சரவணன், விரிவுரையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை