31க்குள் சொத்து வரி செலுத்தினால் சலுகை
குமாரபாளையம், குமாரபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், வரியில்லா இனங்கள் ஆகியவற்றை, நகராட்சி கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என, நகராட்சி கமிஷனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:குமாரபாளையம் நகராட்சி பகுதி பொதுமக்கள், 2025-26ம் ஆண்டிற்கான சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால், 5 சதவீதம் வரிச்சலுகை வழங்கப்படும். வரும், 31க்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. குமாரபாளையம் நகராட்சி பொதுமக்கள் இச்சலுகையை பயன்படுத்தி, இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை நகராட்சி கருவூலத்தில் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.