தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல், நேற்று தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் தலைமை வகித்தார். டவுன் பஞ்., செயலாளர் திருமலை வரவேற்றார். இதில், 2026 சட்டசபை தேர்தலில், முதல்வரின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துக்கூறி கட்சியின் வெற்றிக்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என, மதுராசெந்தில் பேசினார். திருச்செங்கோடு சட்டசபை தொகுதி பார்வையாளர் சீனிவாசன், பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஸ் நன்றி தெரிவித்தார்.