உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க.,வின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்

தி.மு.க.,வின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்

குமாரபாளையம், நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மூர்த்தியின் அறிவுறுத்தல்படி, தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம், குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில், 7வது வார்டு பாலிக்காடு பகுதி மற்றும் 3வது வார்டு கிழக்கு காவேரி நகர் பகுதிகளில் நடந்தது. நகர்மன்ற தலைவரும், வடக்கு நகர பொறுப்பாளருமான விஜய் கண்ணன் தலைமை வகித்தார். தலைமை பேச்சாளர் பன்னீர்செல்வம், தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் பேசினார். நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், ஜேம்ஸ், கந்தசாமி, ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி