உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விஷம் கலந்த சிக்கன் சாப்பிட்ட நாய், பூனை பலி

விஷம் கலந்த சிக்கன் சாப்பிட்ட நாய், பூனை பலி

வெண்ணந்துார்: ராசிபுரம் அருகே, வெண்ணந்துார் அடுத்த தச்-சங்காடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்-புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடி-யிருப்பவர்கள் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பி-ராணிகளை வளர்க்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில், பூனை, நாய்கள் வீதியிலேயே ஆங்காங்கே இறந்து கிடந்-தன.இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, நேற்று காலை பார்த்த போது, சில்லி சிக்கனில் விஷம் கலந்து மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். அதை சாப்பிட்ட பூனை, நாய்கள் இறந்துள்ளன. இதுகுறித்து, வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை