உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலரில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, கொளங்கொண்டை, கக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் ரங்கையகவுண்டர் மகன் சுந்தரம், 65; லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு, 'எக்ஸல் சூப்பர்' மொபட்டில், மல்லசமுத்திரத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே இருந்த வளைவு சாலையை கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து சுந்தரம் தவறி கீழே விழுந்தார். 'ஹெல்மெட்' அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் தினேஷ்குமார், 36, அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ