உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதல்வர் வருகையையொட்டி 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

முதல்வர் வருகையையொட்டி 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

நாமக்கல்: 'தமிழக முதல்வர், நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை அடுத்து, இன்று காலை முதல், நாளை இரவு வரை, இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்திற்கு நாளை (அக்., 22) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தருகிறார். நாளை (அக்., 22), சேலம் விமான நிலையத்திலிருந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால், பாதுகாப்பு கருதி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.அதன்படி, இன்று காலை முதல், நாளை இரவு வரை, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி