மேலும் செய்திகள்
சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மனு
23-Jan-2025
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்க பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, பள்ளிப்பாளையம், ஆலாம்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தேவையானளவு குடிநீர் வழங்க, ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கத்தில் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, சாயக்கழிவுநீர் ஆற்றில் அதிகளவு கலந்து வருகிறது. இதனால் தண்ணீர் பச்சை நிறமாக மாறிவிட்டது. சுத்திகரிப்பு செய்து வழங்கினாலும் குடிக்க முடியாத நிலை ஏற்படும். சாயக்கழிவு நீரால் குடிநீர் விஷமாகும் நிலை தான் ஏற்படுகிறது. இந்த தண்ணீரை மக்கள் குடிக்கும் போது புற்றுநோய், கிட்னி பாதிப்பு உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் விஷமாவதை தடுக்க, விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
23-Jan-2025