கல்வி கடன் முகாம் 23க்கு ஒத்திவைப்பு
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், நாளை கல்விக்கடன் முகாம் நடக்க உள்ளது என, அறிவிக்கப்பட்டிருந்து. இது தொடர்பாக, நகராட்சி முழுவதும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, நாளை நடக்க இருந்த கல்விக்கடன், வரும் 23க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என, நகராட்சி கமிஷனர் தயாளன் தெரிவித்துள்ளார்.