உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முட்டை விலை மேலும் 25 காசு சரிவு

முட்டை விலை மேலும் 25 காசு சரிவு

நாமக்கல் : நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தினசரி, 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த, 1 முதல், 4 வரை ஒரு முட்டை விலை, 530 காசாக இருந்தது. பின், 5ல், 25 காசு, 6ல், 25 காசு குறைந்து, ஒரு முட்டை, 485 காசுகளாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை நாமக்கல் மண்டல, 'நெக்' தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், முட்டை விலை, மேலும், 25 காசு குறைக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 460 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. 3 நாட்களில் ஒரு முட்டைக்கு, 75 காசுகள் சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 570, பர்வாலா, 410, பெங்களூரு, 530, டில்லி, 440, ஐதராபாத், 430, மும்பை, 520, மைசூரு, 533, விஜயவாடா, 450, ஹொஸ்பேட், 485, கோல்கட்டா, 485 என, நிர்ணயம் செய்யப்பட்டது.இதேபோல், கறிக்கோழி உயிருடன் ஒருகிலோ, 138 ரூபாய், முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ, 92 ரூபாயாக, தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி