மேலும் செய்திகள்
ஆடு திருடிய 2 பேர் கைது
29-Mar-2025
ப.வேலுார்: கந்தம்பாளையம் அருகே, சுந்தராம்பட்டி குட்டையை சேர்ந்தவர் செல்லப்பன், 71; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு வெளியே பராமரிப்பு பணி மேற்கொண்டிருந்தார்.அப்போது, அப்பகுதியில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் பறந்து வந்து, செல்லப்பனை சரமாரியாக கொட்டின. இதனால் வலி தாங்க முடியாமல் செல்லப்பன் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், செல்லப்பனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செல்லப்பன் உயிரி-ழந்தார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Mar-2025