| ADDED : டிச 30, 2025 05:06 AM
நாமக்கல்: வரைவு மின்சார திருத்த மசோதாவை கண்-டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், நாமக்கல்-தி-ருச்செங்கோடு சாலையில் செயல்படும் மின்வா-ரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் முருகராஜ், ஆதிநாராயணன், அசோகன், சிவக்குமார், கலை-வாணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், 2025 வரைவு மின்சார திருத்த மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அணுசக்தி சட்டம் மற்றும் அணுசக்தி சேதத்திற்கான குடிமை பொறுப்பு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை திரும்ப பெறவேண்டும். முன்பணம் செலுத்தும் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவும் பணியை நிறுத்த வேண்டும். சண்டிகர், டில்லி, ஒடிசா போன்ற மாநிலங்களில் மின் உற்பத்தி வினியோகத்தில் உள்ள அனைத்து தற்போதைய தனியார் மயமாக்கல் அல்லது உரி-மையாளர் மாதிரிகளை திரும்ப பெற வேண்டும்.அணுசக்தி பாதுகாப்பை சிதைத்து, தனியார் மற்றும் வெளிநாட்டு பங்களிப்பிற்கு திறந்து-விடும் அணுசக்தி மசோதா, 2025ஐ கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.