தீபாவளியை முன்னிட்டு துணி உற்பத்தி தீவிரம்; விற்பனை தொய்வு
பள்ளிப்பாளையம்: தீபாவளி பண்டிகைக்காக, பள்ளிப்பாளையம் சுற்றுவட்டா-ரத்தில் விசைத்தறியில் துணி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகி-றது. ஆனால், விற்பனை எதிர்பார்த்தளவு இல்லை என, உற்பத்தி-யாளர்கள் தெரிவித்தனர்.பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு காட்டன், ரயான், பாலீஸ்டர் உள்-ளிட்ட வகைகளில் சர்ட், சுடிதார், லுங்கி, வேட்டி, சேலை உள்-ளிட்ட துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்-படும் துணிகள், இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்லும். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை சமயத்தில் உற்பத்-தியும், விற்பனை அதிகரித்து காணப்படும்.கடந்த, 2 ஆண்டுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்து விட்டதால், விசைத்தறி தொழில் சற்று ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த ஓராண்டாக விசைத்தறி தொழில் ஏற்றம் கொண்டு நடந்து வருகிறது. விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால், உற்பத்-தியும் தீவிரமாக நடக்கிறது.இதுகுறித்து, நேருநகரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர் சர-வணன் கூறியதாவது:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, துணிகள் உற்பத்தி தீவிர-மாக நடந்து வருகிறது. விற்பனை என்பது எதிர்பார்த்தளவுக்கு இல்லை. ஓரளவுக்கு நடந்து வருகிறது.இன்னும் சில நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்-பார்ப்பில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.