உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிளஸ் 1 தேர்வில் தோல்வி: தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரிக்கை

பிளஸ் 1 தேர்வில் தோல்வி: தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரிக்கை

நாமக்கல், 'தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களையும், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறை கொண்டுவந்த பின், ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளியில் இருந்து இடைநின்று வேறு வேலைக்கு செல்ல துவங்கினர். தமிழகத்தில், 2017-18 முதல், நடப்பாண்டு வரை, பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இடைநிற்றலுக்கு காரணமாக அமைந்திருந்தது பிளஸ் 1 பொதுத்தேர்வு.அவற்றை ரத்து செய்ததை வரவேற்கிறோம். மேலும், 2017-18 முதல், 2024-25 வரை, பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் அனைவரையும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை