மேலும் செய்திகள்
வாரச்சந்தை சுங்க வசூல்ரூ.7.63 லட்சத்துக்கு ஏலம்
03-Apr-2025
ப.வேலுார்ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை, வாரச்சந்தை, ஆடு, கோழி சந்தை நடக்கிறது. அதேபோல், ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே தினசரி வாழைக்காய் ஏல மார்க்கெட், மீன் மார்க்கெட் மற்றும் ப.வேலுார் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் தனியார், அரசு பஸ், மினி பஸ் ஆகியவற்றிற்கு, குத்தகை ஏலம் எடுத்தவர்கள், சுங்க கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். ப.வேலுாரில், ஞாயிறுதோறும் கூடும் வாரச்சந்தையில், 300-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கின்றன. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி, பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். இதற்கு சுங்க கட்டணம் குத்தகைதாரர்கள் மூலம் வசூல் செய்யப்படுகிறது. சில வாரங்களாக, அதிகப்படியான கட்டண வசூலிப்பதால், விவசாயிகள், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதேபோல், ஞாயிறுதோறும் கூடும் ஆடு, கோழி சந்தையில் டவுன் பஞ்சாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இருமடங்காக குத்தகைதாரர்கள் வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். வாழை ஏல மார்க்கெட்டில் வாழைத்தார் ஒன்றுக்கு, டவுன் பஞ்., நிர்வாகம், மூன்று ரூபாய் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என, கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால், குத்தகைதாரர்கள் நிர்ணயித்ததை விட அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர். குத்தகைதாரர்கள் ஏலம் எடுத்துள்ள வாரச்சந்தை, வாழைத்தார் மார்க்கெட், கோழிச்சந்தை, மீன் மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நிர்ணயித்த கட்டணம் குறித்த அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் மூவேந்தர பாண்டியனிடம் கேட்டபோது, ''குத்தகைதாரர்கள், ஏலம் எடுத்துள்ள வாரச்சந்தை, ஆடு, கோழி சந்தை, வாழைத்தார் ஏல மார்க்கெட், மீன் மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகை குறித்து அறிவிப்பு பலகை உடனடியாக வைக்கப்படும். மேலும், ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள் நிர்ணயத்தை கட்டணத்தை விட அதிகப்படியாக வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
03-Apr-2025