பிரதமர் மோடிக்கு விவசாயிகள் பாராட்டு
நாமக்கல், 'இந்திய விவசாயிகள் நலன்தான் முக்கியம்' என, தெரிவித்த பிரதமர் மோடிக்கு, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் மாநிலத்தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமர் மோடி, அமெரிக்காவின் வேளாண் வர்த்தக பொருட்களை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார், மேலும் எனக்கு இந்திய விவசாயிகள் நலன்தான் முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசுக்கு எதிராக பதிலடி கொடுத்ததை, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்று பாராட்டுகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.