உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பா.ஜ., அரசை தோற்கடிக்க விவசாயிகள் சங்கம் முடிவு

பா.ஜ., அரசை தோற்கடிக்க விவசாயிகள் சங்கம் முடிவு

நாமக்கல்:உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:இந்திய விவசாயிகள் டில்லி எல்லை பகுதியில் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கேட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், இந்தியாவில், 70 சதவீத விவசாயிகள் ஒரே அணியாக திரண்டு நின்று வரும், 2024ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் மத்திய அரசை தோற்கடிப்போம். இந்தியா முழுதும் டிபாசிட் இழக்க செய்வோம் என்பதை, மத்திய பாஜ., அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் எச்சரிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை