உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது வாங்கி கொடுத்து தந்தை கொலை: தங்கை கணவர் மீது புகார்

மது வாங்கி கொடுத்து தந்தை கொலை: தங்கை கணவர் மீது புகார்

குமாரபாளையம் : தந்தைக்கு மது வாங்கி குடிக்க வைத்து, தங்கையின் கணவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து அடித்து கொலை செய்துவிட்டதாக கூறி, குமாரபாளையம் போலீசில் புகாரளித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே, சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி, 55; சலவை தொழிலாளி. இவருக்கு மைதிலி, 33, வசந்தி, 24, என, இரண்டு மகள்கள். மூத்த மகள் மைதிலியுடன் ரவி வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, 6:30 மணியளவில், சேலம் - கோவை புறவழிச்சாலை, தனியார் பள்ளி பின்புறம் மண் மேட்டில், ரவி சடலமாக கிடந்தார். தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், மைதிலி, குமாரபாளையம் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: என் தங்கை வசந்தியின் கணவர் பூபதி, 25. இவருக்கு மகளிர் குழுவில், வசந்தி கடன் வாங்கி கொடுத்தார். அந்த கடனை, ரவி திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் வசந்தி, கணவரை பிரிந்து என்னுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பூபதி அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து, வசந்தியை வாழ வருமாறு வற்புறுத்தி வந்தார். அப்போது என் தந்தை ரவி, பூபதியை கண்டித்து அனுப்பினார். இதனால் என் தந்தைக்கும், பூபதிக்கும் முன் விரோதம் இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, என் அப்பா ரவிக்கு, வசந்தியின் கணவர் பூபதி மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் சேர்ந்து மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். பின் அவர் சடலமாக கிடந்துள்ளார். அதனால், பூபதி மற்றும் அவரது நண்பர்கள் தான், என் தந்தை ரவியை அடித்து கொலை செய்திருக்க வேண்டும். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, குமாரபாளையம் போலீசார், பூபதி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ