ஈ, கொசு தொல்லை அதிகரிப்பு மருந்து அடிக்கும் போராட்டம்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியனில், 21 பஞ்.,கள் உள்ளன. இப்பகுதிகள் அனைத்தும் கோழிப்பண்ணைகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், ஈ, கொசு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி விசேஷ நாட்களில் உறவினர்களும் அவதிக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக, ஈ, கொசு தொல்-லையை கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டங்களில் மனு கொடுத்ததுடன், பி.டி.ஓ.,விடமும் நேரில் மனு அளித்தனர்.ஆனால், யூனியன் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. இதை கண்டித்து, புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., தலைவர் செல்வம் தலைமையில், ஈ, கொசு தொல்லையை கட்-டுப்படுத்த வலியுறுத்தி, கொசு மருந்து அடிக்கும் போராட்டம் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர், கிராமம் கிரா-மமாக கொசு மருந்து அடித்து போராட்டம் நடத்தினர்.