உயிரிழந்த தி.மு.க., உறுப்பினர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்
நாமக்கல், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகரம், சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கலம் டவுன் பஞ்., காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்., ஆகிய பகுதிகளில், கடந்த ஓராண்டில் இயற்கையாக உயிரிழந்த, தி.மு.க., உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் உத்தரவுப்படி, நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி, மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்து, குடும்ப நல நிதி உதவி வழங்கினார்.நாமக்கல் கிழக்கு நகரத்தில், 16 பேர், மேற்கு நகரத்தில், 32, தெற்கு நகரத்தில், 24, சேந்தமங்கலம் டவுன் பஞ்., 30, காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்., 19 என, மொத்தம், 193 உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நாமக்கல் நகர செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவகுமார், டவுன் பஞ்., செயலாளர்கள் தனபாலன், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.