உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடிசை வீட்டில் தீ விபத்துரூ.2 லட்சம் பொருள் சேதம்

குடிசை வீட்டில் தீ விபத்துரூ.2 லட்சம் பொருள் சேதம்

ப.வேலுார்:-ப.வேலுார் அருகே, பொத்தனுாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 50; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் குடும்பத்துடன் குடிசை வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார்.இரவு, 11:00 மணியளவில், மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீப்பற்றி எரிய தொடங்கியது.பதறிபோன பாலகிருஷ்ணன், குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வெளியே வந்து உயிர் தப்பினார். குடிசை வீடு தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தீவிபத்தில் வீட்டிலிருந்த பீரோ, கட்டில், டிவி, பேன், துணிமணிகள், உணவு பொருட்கள் அனைத்தும் எரிந்து கருகின. இதன் மதிப்பு, இரண்டு லட்சம் ரூபாயாகும். ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை