பணம் கட்டி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, பள்ளம்பாறையில் பணம் கட்டி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். சேந்தமங்கலம் அருகே பள்ளம்பாறையில் சேவல் சண்டை நடப்பதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பள்ளம்பாறை பகுதியில் எஸ்.ஐ., தமிழ்குமரன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ராசிபுரத்தை சேர்ந்த மூன்று பேரும், சேந்தமங்கலத்தை சேர்ந்த இருவரும், பணம் கட்டி சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ஒரு சேவலை பறிமுதல் செய்தனர்.