உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் அனுசரிப்பு

மோகனுார், நவ. 1-முன்னாள் பிரதமர் இந்திராவின், 39 வது நினைவு நாள் நேற்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், மோகனுாரில் உள்ள அவரது சிலைக்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னாள் மாவட்ட காங்., தலைவர் வீரப்பன், மோகனுார் பேரூர் காங்., தலைவர் சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் காந்தி, தொழிற்சங்கப் பிரிவு சுதேஸ், அருணகிரி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* குமாரபாளையம் நகர காங்., கமிட்டி சார்பாக முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நகர காங்., அலுவலகம் முன், நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில், இந்திரா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.நகர பொருளாளர் சிவராஜ், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், நகர துணைத் தலைவர் காளியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். நகர காங்., செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !