உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சட்ட விரோதமாக மது விற்ற நான்கு பேர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற நான்கு பேர் கைது

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சட்ட விரோதமாக மது விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு, 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் வட்டமலை உணவு விடுதி அருகில், பள்ளிபாளையம் சாலை உணவு விடுதி அருகில் சட்ட விரோதமாக மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலன், 68, பூமிநாதன், 47, இளங்கோ, 45, மாதேஸ்வரன், 64, ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து, 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ