உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

பள்ளிப்பாளையம்: சென்னை சர்வ சேவா டிரஸ்ட், பாப்பம்பாளையம் கிராம ஊராட்சி மையம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், பள்ளிப்பாளையம் அருகே, பாப்பம்பாளையம் கிராம ஊராட்சி மையத்தில், நேற்று முன்தினம், நடந்தது. அறங்காவலர் சுரேஷ், பாப்பம்பாளையம் பஞ்., தலைவர் ஜெயவேல் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.முகாமில், கலந்து கொண்ட பொது மக்களுக்கு, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, 100க்கு மேற்பட்டோருக்கு கண் கண்ணாடிகளை இலவசமாக வழங்கினர். மேலும், 30 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !