உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சியில் 62 குடும்பங்களுக்கு இலவச பட்டா

ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சியில் 62 குடும்பங்களுக்கு இலவச பட்டா

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சியில், வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி, பயனாளிகளுக்கு பட்டா வழங்கி பேசியதாவது:சேந்தமங்கலம் வட்டம், கோணங்கிபட்டியில், 223 பயனாளிகளுக்கு, 2.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நத்தம் நிலவரி திட்ட வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.தற்போது, 62 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 5 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே, நாமக்கல்லில் தான் அதிகளவு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 35,000 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில், 7,000 பயனாளிகளுக்கு, தலா, 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பேளுக்குறிச்சி பகுதியில், 43 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிருக்கு, உரிமைத்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., சாந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை