உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தலைவர் சிலையை மறைக்க இலவச வேட்டி, சேலை: சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

தலைவர் சிலையை மறைக்க இலவச வேட்டி, சேலை: சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

நாமக்கல்: தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து, தலைவர் சிலைகளை மறைக்க முதியோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலையை பயன்படுத்தி உள்ளனர். இது, சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.வரும் ஏப்., 19ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதற்கான அறிவிப்பு கடந்த, 16ல், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலக்கு வந்துள்ளது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த முதல்வர், அரசின் சாதனை விளக்க படங்களை ஊழியர்கள் அகற்றினர். நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள நேரு பூங்காவில் உள்ள காமராஜர், நேரு சிலைகள், செலம்பகவுண்டர் பூங்காவில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைகள், கட்சி சின்னங்கள் துணியால் மறைக்கப்பட்டன.அதேபோல், நாமக்கல் - மோகனுார் சாலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலையும், கட்சி சின்னமும் துணியால் மறைக்கப்பட்டது. தலைவர்கள் சிலைகள், சின்னங்களை மறைப்பதற்கு, காடா துணி அல்லது கித்தான் சாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். ஆனால், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை, கட்சி சின்னத்தை மறைப்பதற்கு, தமிழக அரசு சார்பில், முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலையை பயன்படுத்தி உள்ளனர்.ஓ.ஏ.பி., பயனாளிகளுக்கு, 2023ல் தீபாவளிக்கு வழங்கிய வேட்டி, சேலை பயன்படுத்தி மறைத்திருப்பதுடன், அவற்றை வீணடித்துள்ளது, சமூக ஆர்வலர்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்