உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த காட்டுப்பகுதியில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா விற்பனை செய்யப்படுவதாக, கடந்த ஜூலை மாதம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கொக்கராயன்பேட்டை போலீசார், குடோனில் சோதனை நடத்தி, 2 டன் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த விட்டம்பாளையம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன், 25, என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று, போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி