உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சதுர்த்தி விழாவிற்காக கண் திறக்க தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

சதுர்த்தி விழாவிற்காக கண் திறக்க தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

ராசிபுரம், ராசிபுரம் அருகே சதுர்த்தி விழாவிற்காக தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கண் திறப்புக்கு தயார் நிலையில் உள்ளன. நாடு முழுவதும் ஆகஸ்ட், 27 ம் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட உள்ளது. ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டி பகுதியில் களிமண் மற்றும் பேப்பர் கூழ், கிழங்கு மாவு ஆகியற்றால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு அடியில் இருந்து, 15 அடிவரை இங்கு சிலைகள் செய்யப்படுகின்றன. சிலைகளை டெலிவரி செய்ய இன்னும், 18 நாட்கள் மட்டுமே உள்ளதால், 99 சதவீதப்பணிகள் முடிந்த நிலையில் கண் திறக்கும் கடைசி கட்டப்பணிக்காக, 500க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி