உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பிரசாரம்

கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பிரசாரம்

நாமக்கல் : நாமக்கல் லோக்சபா தொகுதியின், தி.மு.க., கூட்டணியில் உள்ள, கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து, நேற்று திருச்செங்கோட்டில் அக்கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பிரசாரம் மேற்கொண்டார்.அதில், திருச்செங்கோடு அடுத்த மண்டகப்பாளையம், கொசவம்பாளையம், குமரமங்கலம், போக்கம்பாளையம், காந்தி ஆசிரமம், மோளியப்பள்ளி, ராயர்பாளையம், 85.கவுண்டம்பாளையம், உஞ்சனை, எளையாம்பாளையம், கோவில்பாளையம், இடையர்பாளையம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தனர்.அப்போது, தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம், முதல்வரின் காலை உணவுத்திட்டம், உயர்கல்விக்கான உதவித்தொகை, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை ஈஸ்வரன் விளக்கி கூறினார். விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, 'இண்டியா' கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு ஓட்டளித்து முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை