உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், மாநில பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். கல்லுாரியில் துவங்கிய பேரணி, நாமக்கல் நகர போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று, மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது.அதில், ராமலிங்கம் அரசு மகளிர் மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி மாணவ, மாணவியர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) மோகனா, பேராசிரியர் ஷர்மிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்