உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கண்ணாடி விரியன் பாம்பு காப்பு காட்டில் விடுவிப்பு

கண்ணாடி விரியன் பாம்பு காப்பு காட்டில் விடுவிப்பு

வெண்ணந்துார், ஜன. 4-அத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே அமைந்துள்ள சமத்துவபுரம் பகுதியில் செல்வராஜ் மகன் வேல்முருகன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே, 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இருந்ததை கண்ட வேல்முருகன் அதிர்ச்சியடைந்தார்.தொடர்ந்து, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர். அதை, ராசிபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை