மேலும் செய்திகள்
அரசு கலைக்கல்லுாரியில் 23ல் பட்டமளிப்பு விழா
21-Mar-2025
ராசிபுரம்:ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 685 மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்றிதழ் வழங்கப்பட்டது. ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் பானுமதி தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''இக்கல்லுாரியில், 3,362 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இளநிலையிலும், முதுநிலையிலும் பயின்ற, 685 மாணவ, மாணவியர் தற்போது பட்டம் பெறுகின்றனர். அவர்களுக்கு, வாழ்த்துக்கள்,'' என்றார்.தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சந்தியா செல்வி, மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசுகையில், ''கல்வி மட்டுமே மாணவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்பதால், மாணவர்கள் இளங்கலை கல்வியோடு நின்றுவிடாமல், முதுகலை உயர் கல்வியையும் தொடர்ந்து பயின்று வாழ்க்கையில் உயர்ந்து, நல்ல நிலைக்கு வரவேண்டும். கிராமப்புற கல்லுாரியில் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று, பட்டம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார். தொடர்ந்து, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
21-Mar-2025