மேலும் செய்திகள்
ஆக.15 ல் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
12-Aug-2025
நாமக்கல்:'சுதந்திர தினத்தையொட்டி, வரும், 15ல், நாமக்கல் மாவட்-டத்தில், 310 கிராம பஞ்.,களில், கிராம சபை கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்திலுள்ள, 310 கிராம பஞ்.,களிலும், வரும், 15ல், சுதந்திர தினத்தன்று, காலை, 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை வாசித்தல். துாய்மையான குடிநீர் வினியோ-கத்தை உறுதி செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், கூட்-டத்தில் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் பற்றியும் விவா-தித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-Aug-2025