மேலும் செய்திகள்
குரூப் 2 முதன்மை தேர்வு: 319 பேர் பங்கேற்பு..
09-Feb-2025
நாமக்கல்: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை எழுத்துத்தேர்வு, மாநிலம் முழுவதும், நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், பொரசப்பாளையம் விநாயகா மேல்நிலைப்பள்ளி, சி.எம்.எஸ்., இன்ஜினியரிங் கல்-லுாரி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி என, மூன்று மையங்களில் நடந்தது. இதற்காக, மொத்தம், 834 மாணவ, மாணவியர் விண்-ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்-யப்பட்டிருந்தன. பொரசப்பாளையம் விநாயகா மேல்நிலைப்பள்-ளியில் நடந்த எழுத்துத்தேர்வை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.தொடர்ந்து, தேர்வு மையத்தில் பார்வைத்திறன் குறைபாடு-டைய மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, உதவி ஆசிரியர்கள் நிய-மிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதையும், கலெக்டர் பார்வை-யிட்டார். இத்தேர்வு பணிகளுக்காக, முதன்மை கண்காணிப்பா-ளர்கள், கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள், நடமாடும் குழுக்கள், ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். மேலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு-பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை போட்டித்-தேர்வில், 820 பேர் பங்கேற்றனர். 14 பேர் கலந்துகொள்ள-வில்லை.
09-Feb-2025