சக்கரப்பட்டி சித்தருக்கு 25ல் குருபூஜை விழா
சக்கரப்பட்டி சித்தருக்கு25ல் குருபூஜை விழாப.வேலுார், நவ. 21--ப.வேலுார் அடுத்த பாண்டமங்கலத்தில், சக்கரப்பட்டி சித்தர் என்ற சதானந்த சித்தர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, வரும், 25ல், 12ம் ஆண்டு குருபூஜை விழா நடக்கிறது. அதையொட்டி, காலை, 6:30 மணிக்கு சதானந்த சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து விநாயகர், சிவன் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு குரு வணக்கம், திருப்பள்ளி எழுச்சி, சக்கரப்பட்டி சித்தருக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடக்கிறது. மதியம், 12:30 மணிக்கு மகேஸ்வர பூஜை நடக்கிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த சிவனடியார்கள் மகேஸ்வர பூஜையில் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை சக்கரப்பட்டி சித்தர் அறக்கட்டளை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் செய்து வருகின்றனர்.