உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

ராசிபுரம்: ஏ.கே.சமுத்திரம் ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளி மாண-வர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள ஞானோதயா இன்-டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி ரிதன்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு, 497 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த மாணவியை பள்ளி தலைவர் அரங்கண்ணல், தாளாளர் மாலாலீனா ஆகியோர், சால்வை அணிவித்து பாராட்டினர். உடன் பள்ளி முதல்வர் ரோஸ்லின் பபிதா மற்றும் மாணவியின் பெற்றோர் இருந்தனர்.இப்பள்ளி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு, 92 சதவீதம் மாணவர்கள், 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி தலைவர் வாழ்த்-தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !