உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிறந்த் நாள் வாழ்த்து

பிறந்த் நாள் வாழ்த்து

ராசிபுரம், நாமக்கல், கொசவம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித், 24; இவரது மனைவி ஜமீனா, 21; இருவரும், ஓராண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஜமீனா, கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், ரஞ்சித் தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வதால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியடைந்த ஜமீனா, கணவனை பிரிந்து தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் ரஞ்சித் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, தங்கை வீட்டு விசேஷத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, ரஞ்சித் வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால், அங்கு செல்லாமல், ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட், சக்தி நகர் பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த லாரி முன் பாய்ந்தார். இதில், ரஞ்சித் தலை நசுங்கி பலியானார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை