உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல், மோகனுாரில் கடும் பனிமூட்டம்

நாமக்கல், மோகனுாரில் கடும் பனிமூட்டம்

நாமக்கல்: நாமக்கல், மோகனுாரில் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். மாநிலம் முழுவதும், வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்-துள்ள நிலையில், பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 2024ல் இயல்பைவிட அதிகமாக மழை பெய்தது. நடப்பாண்டு தொடக்கம் முதல், பனியின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், பனியின் தாக்கம் அதிகமாக காணப்-படுகிறது.அதன்படி, நேற்று அதிகாலை முதல் பனி மூட்டம் காணப்பட்-டது. குறிப்பாக, பனி புகை மண்டலம் போல் காட்சியளித்தது. வாகன ஓட்டிகள், முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகனங்-களை இயக்கினர். குறிப்பாக, நாமக்கல் - மோகனுார் சாலையில் எதிரே வரும் வாக-னங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்பட்டது. இது, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதால், தங்கள் வாகனங்களை மெதுவாக ஓட்டிச்சென்றனர். மேலும், குளிர்ந்த காற்றும் வீசியதால் குடும் குளிர் நிலவியது. அதேபோல், மோகனுார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பனி மூட்டம் காணப்பட்டது. இந்த பனி மூட்டம், காலை, 8:30 மணி வரை நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை