உயர் கோபுர மின்விளக்கு திறப்பு
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியம், அனந்தகவுண்டம்பாளையம் பஞ்., பள்ளி மாணவ, மாணவியரின் நலன் கருதி, அரசு துவக்கப்பள்ளி அருகே, எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அதை நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., சின்ராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி, வெண்ணந்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.