உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

ராசிபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

ராசிபுரம்: ராசிபுரம் புதிய நீதிமன்றம் எதிரே, சேலம் சாலையில் அமைந்-துள்ள சுஜிதா திருமண மண்டபத்தில், 'பாரத் டிரேடு பேர்' நிறு-வனம் சார்பில் சம்மர் ஷாப்பிங் திருவிழா மற்றும் வீட்டு உப-யோக பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. கடந்த, 25ல் தொடங்கியது. நாளை இரவு, 9:30 மணி வரை நடக்கிறது. எம்.பி., ராஜேஸ்-குமார், கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கண்-காட்சியில், 75க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்-ளன.இவற்றில், பர்னிச்சர்கள், உற்பத்தியாளரின் நேரடி விற்பனையில் சிறப்பு சலுகையாக, உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படு-கின்றன. வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள், மகளிருக்கான வீட்டு உப-யோக பொருட்கள், அழகு சாதன பொருட்கள், ரெடிமேடு ஆடைகள் போன்ற எண்ணற்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்-ளன. மேலும், சிறுவர், சிறுமியருக்கு, பனிச்சறுக்கு விளையாட்டு, ஒட்-டக சவாரி, தண்ணீர் விளையாட்டு போட்டிகள் போன்ற எண்-ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது என, 'பாரத் டிரேடு பேர் நிறுவன இயக்குனர் அமானுல்லா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை