உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மனைவியை குத்திய கணவன் கைது

மனைவியை குத்திய கணவன் கைது

நாமக்கல்:சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை அடுத்த வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 35, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிருந்தா, 30. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள்.மணிகண்டனின் தந்தை நடத்தி வந்த பழைய இரும்பு கடையில், சித்தி மகன் யுவராஜ், 30, பணியாற்றி வந்தார். அப்போது, பிருந்தாவும், யுவராஜும் பழகினர்.மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த மணிகண்டன், அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். வெறுத்துப்போன பிருந்தா, 2022ல் மணிகண்டனை பிரிந்து, யுவராஜுடன், நாமக்கல், மோகனுார் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். அடிக்கடி அங்கு சென்ற மணிகண்டன், குழந்தைகளை பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு, நாமக்கல் - மோகனுார் சாலை, அய்யப்பன் கோவில் அருகே, யுவராஜுடன் டூ - வீலரில் சென்ற பிருந்தாவை பார்த்த மணிகண்டன், தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால், பிருந்தாவின் தலையில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மணிகண்டனை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி