உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிலக்கடலையில் ஜிப்சம் இடும் தொழில் நுட்பம் குறித்து யோசனை

நிலக்கடலையில் ஜிப்சம் இடும் தொழில் நுட்பம் குறித்து யோசனை

எலச்சிபாளையம்: நிலக்கடலைக்கு, 'ஜிப்சம்' இடும் தொழில்நுட்பம் குறித்து, எலச்சிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா யோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவரது அறிக்கை: எலச்சிபாளையம் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும், தற்போது நிலக்கடலை விதைப்பு செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலை சாகுபடியில், 'ஜிப்சம்' இடுதல் அவசியமாகும். நிலக்கடலையில் அதிக மகசூல் மற்றும் தரமான கடலை பெற நல்ல ஊட்டச்சத்து தேவை. கால்சியம் குறைபாடால் காய்கள் அழுகல் மற்றும் பொக்கு காய்கள் அதிகளவில் உண்டாகின்றன. ஜிப்சத்தில் கால்சியம் மற்றும் சல்பர் சத்து உள்ளது. இதில், கால்சியம் காய் மற்றும் விதை வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. சல்பர் பருப்பில் உள்ள எண்ணெய் சத்தின் அளவை அதிகப்படுத்துகிறது.பாசன பயிருக்கு, 'ஜிப்சம்' ஒரு ஹெக்டேருக்கு, 200 கிலோ அடியுரமாக, 40 - -45வது நாளில் இட வேண்டும். மானாவாரி பயிருக்கு, 45 - -75வது நாளில் செடிகளில் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து, 'ஜிப்சம்' இடவேண்டும். செடியின் அருகில் மண்ணை கொத்தி, 'ஜிப்சம்' இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.கால்சியம் மற்றும் கந்தகம் குறைபாடுள்ள நிலங்களில், 'ஜிப்சம்' இடுதல் நல்ல பயனை தரும். ஜிப்சத்தை மொத்த அளவில் பாதியை (200 கிலோ) ரசாயன உரங்களுடன் அடியுரமாக இடுவதால் மானாவாரி மற்றும் இறவை பயிரில் நுாற்புழுக்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப்புகளை குறைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை